Pages

Saturday, January 19, 2013

பரந்து விரிந்ததே வானம்


பரந்து விரிந்ததே வானம் 


பனி படர்ந்ததே மேலும் 


முனி விழித்ததே  உள்ளே 


சனி பறந்ததே  வெளியே.

 


கனி தோன்றியது  கண்ணில் 


கர்வம்  தோன்றியது  கருத்தில் 


இனி  யாரென்ன சொன்னாலும் 


இறக்கை மறக்காமல் பறக்கும்.



இருக்கை  மாறினால் என்ன?


செருக்கை  மறவா இதயம் 


இருக்கை  வேண்டாமென 


கர்வக்கதை  பேசுவதைக் 


கேட்டுக்    கேட்டுக் காது 


குளிர்ந்து குளிர்ந்து  நகைக்கும்.
 


நாற்காலிக்கு  நகைக்கும் 


நம்பிக்கையை அழிக்கும் 


நயவஞ்சகர்  இனமோ 


நளினமாய்  நடந்து நடந்து 


நடுகாட்டில் உறங்கும் 


நாளை மறந்து மறந்து 


நக்கலாய் சிரிக்கும் 


நன்றாய்   கொக்கரிக்கும். 



நலிந்த மண்புழுக்களோ 


நாசூக்காய்  நெளியும் 


நாள் பார்த்து  ஏங்கும்



மண்புழுவை மதியாத 


மகாவீரர் எல்லாம் 


மண்ணோடு மண்ணாகும் 


மண்ணுக்கு உணவாகும் 


மணநாளையும்  மறந்து 


மஹா மாவிரதம் இருந்து 


வழிபார்த்து இருக்கும் 


புழுவிடம் சேர்வர் அந்தோ! 


 






No comments:

Post a Comment