பெண் என்றார் பேதை என்றார்
பேய் என்றார் பித்தென்றார்
தாய் என்றார் தெய்வம் என்றார்
தொய்வில்லாத அழகு என்றார்.
எங்களுக்கு மன உளைச்சல்
போக்கும் மருந்தென்றார்.
விளையாட்டு பொம்மை என்றார்
பிதுக்கும் களி மண்ணென்றார்
கசக்க வேண்டிய பூ என்றார்.
ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட எண்ணங்கள்.
எங்களை மனிதர்களாய்
மதிக்க வேண்டிய காலம்
மன்னர்களே, வந்தது இப்போ.
பேய் என்றார் பித்தென்றார்
தாய் என்றார் தெய்வம் என்றார்
தொய்வில்லாத அழகு என்றார்.
எங்களுக்கு மன உளைச்சல்
போக்கும் மருந்தென்றார்.
விளையாட்டு பொம்மை என்றார்
பிதுக்கும் களி மண்ணென்றார்
கசக்க வேண்டிய பூ என்றார்.
ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட எண்ணங்கள்.
எங்களை மனிதர்களாய்
மதிக்க வேண்டிய காலம்
மன்னர்களே, வந்தது இப்போ.