Pages

Friday, July 31, 2015

old age


The 'I' rules nothing any more

The 'I' wants to rule everything

The ones who loved souls

The ones who loved hearts

Are the ones who are blessed.


Wednesday, July 29, 2015

Abdul Kalam

Great men see the sun amidst chaos

They ignore the ripples of confusion

They lead with a rare focus on light

Others can't see the shine that well

They critique or wait in silence

To see  the result of sweat and toil

Either to mock or  to fall at feet


Lands need such Godmen of power

Leaders like Kalam write destinies

They catch the minds of people

Write their visions on them vivid


Writings slowly take charge

They disseminate, spread, catch fire

Reviving a people tired of losing.

A society  waiting  for morality

Waiting for leaders, real leaders

Coming out of self-preservation

Attempting to preserve society.


Rameswaram symbolizes holiness

The island of penance, peace

Strengthening a new ethics

Power and objectivity in life


Our land that created hierarchy of skin

That practiced suppression

Has at last brought out other models

Has recognized the ordinary man

Ekalaivan belongs to the past.

Today we are ready to smile

At every one in the eye.

We march ahead with self esteem.

Kalam is our glorious past.

No need to be ashamed any more

Super powers are ethical at bottom.









Saturday, June 14, 2014

பெண்  என்றார்  பேதை என்றார்

பேய் என்றார்  பித்தென்றார்

தாய்  என்றார்  தெய்வம் என்றார்

தொய்வில்லாத  அழகு  என்றார்.

எங்களுக்கு  மன உளைச்சல்

போக்கும்  மருந்தென்றார்.

விளையாட்டு  பொம்மை என்றார்

பிதுக்கும் களி  மண்ணென்றார்

கசக்க  வேண்டிய  பூ என்றார்.  

ஆண்டாண்டு  காலமாய்

ஆண்ட  எண்ணங்கள்.


எங்களை மனிதர்களாய்

மதிக்க வேண்டிய காலம்

மன்னர்களே, வந்தது  இப்போ.

   

Friday, March 28, 2014

post script

அவள் வயதானவள் என்பதால்

அவர் என்று அழைக்கப் படுவார் இனி


அவர் அமர்ந்திருந்தார்

மகன் இப்பக்கம்

பேரன்  அப்பக்கம்

எல்லோரும் உணவருந்தினர்



அவர்  முகத்தில் மட்டும் கவலை

வெங்காயம் சாம்பாரில்

பூண்டு வேற என்ன செய்ய

ஏப்பா தம்பி,  வேறே உண்டா ?


வெங்காயம்   பூண்டில்லாமல்

சமையல்  இல்லையே

என்றான் அவன்




Thursday, January 23, 2014

The trees


The silent war was on

The trees cursed silently

Who will be the greenest?

Who will be the smartest?

In their imagination

They read meanings not intended

Ordinary nods gained

Casual coughs added punch

The power game

Read every move

From Foucauldian type

Power could not understand

Powerlessness or disinterestedness

Leaves that loved attention

Failed to understand others

The sun smiled

The earth celebrated

Life went on in full swing

Clash of Titans of leaves

Imaginations of will

Burials of intelligence

Ruling of terrors

Born out of deep fears


Thursday, November 21, 2013

தீமிதி பெண்ணே


அங்கங்கே தென்படும் முகங்கள்

அத்துமீறி நடமாடும் உடல்கள்

தீவந்து உன்மேல்  விழுந்ததோ?

தியை நீ  உன்மேல் விட்டாயோ?


தீவினைகள் உன்மேல்  பட்டதுவோ?

தீயசொல் உன்மேல் படர்ந்ததுவோ?

கோபத்தின் உச்சிமேல் எண்ணைகண்டு

மண்ணை நாட முயற்சித்தாயோ?


அகர இகரம் உகாரம் போல் குழைந்தாங்கு

தோன்றியது  முகம் போன்ற முகம் ஒன்று

சிரிப்பதுவும் அழுவதுவும் ஒன்றே என்ற

சிரிக்காத தத்துவத்தின் முகமானது.


தோலின் மேல் தொலேறி  தொங்கியது

வீங்கிய முகமும் கையும் காட்சியானது

கண்காட்சி அல்ல அது கதறும் காட்சி

உணர்வுகளின்  சுமை தாங்காமல் வீறிய காட்சி


வார்த்தைத்  தீயைத் தப்பிக்க தீயை நாடி

வாடிக்கருகும் மலர்கள் எத்தனையோ?

நாவினால் கக்கப்படும் தீயை  விட

காவு வாங்கும் தீயே மேல் என்பர் அவர்.


எண்ணங்களும் வார்த்தைகளும் சமூகம்தான்

எண்ணி எண்ணிக் கருகிட வே ண்டாம்  தாயே

தனி மனிதன் தனியாய் எண்ணும் அளவிற்கு

தானாக யோசித்து வெல்லும் அளவிற்கு


வளரவில்லை தாயே உணர வேண்டும் நீயே

சமூகம் தான் இன்று தனி மனிதன்

சமூகத்தின் எண்ண அலைகள் தான் வீட்டில்

சமூகம் என்பது எண்ணக் குவியல்கள்


இன்னும் நாம் விலங்கினம் தான்

இதை நாம் மாற்றிடல் ஆகாது காண்

துரத்தி வரும் நெருப்பு எண்ணங்கள்

இன்னும் விலங்கான சமூகத்தின் வலைகள்


தாயாய், போதையாய்ப் பெண்ணைப் படைத்த

மனித மனம் பெண்ணை உயிராய்க் காண

இன்னும் பல நாள் ஆகும் தாயே

இன்னுடலை அக்கினிக்கு இரையாக்காதே நீயே


உன்னை நோக்கி வரும் தீயைப் பிடித்து

முடிந்தால் அன்றைய உணவை ஆக்குவாயே!

Saturday, November 16, 2013

சச்சின் டெண்டுல்கர் November 16, 2013


"உன் கனவுகளை நிஜமாக்கு

அதற்காக குறுக்கு வழியை நாடாதே"


பதினோரு வயது பச்சைக் குழந்தைக்கு

பக்குவப்பட்ட தந்தையின் அறிவுரை


இருபத்து நான்கு வருடங்கள் ஆடி

நேர்மையின், அடக்கத்தின் வழி நாடி


இப்படியும் வாழலாம் இலக்கணம் படைத்து

எளிமையாக, இயற்கையாக மண்ணை ஒற்றி


காவியமாகி, கண்ணீர்  மல்க சென்றதை

கடைசி வரையில் மனம் கரைப்பதில்லை.


இப்படிப்பட்ட யதார்த்தங்களும் இருக்கின்றன

கோடிக்கணக்கான இள இதயங்களுக்கு


இந்த இலக்கணம் இனி அமுதளிக்கும்

நாமும் வாழலாம் எனச் சிந்தனை பிறக்கும்


ஒவ்வொரு உயிராய் நினைவு கூர்ந்து

உயிருக் குயிராய் வாழ்ந்தவர் போற்றி


நின்று அனைவருக்கும் நன்றி சான்ற பாங்கு

நல்லவர் நிச்சயம் வெல்லலாம் என்றது.


உழைக்கும் உழைப்பே தெய்வப்பாங்கு

உழைக்கும் வாய்ப்பை பெறுவது எளிது


உண்ணும் போதும் உறங்கும் போதும்

உழைப்பைச் சார்ந்தே எண்ணி வாழ்ந்தால்


சுத்தமான இருதயக் காற்றில்  சுற்றி நின்ற

அசுத்தக் காற்று தானே அழிந்து பூக்கும்


கோபத்தை வென்ற இந்த நாயகன்

கோடானுகோடி  காலம் வாழ்வான்


இந்திய மண்ணில் இப்படி வாழ்வதே

எனக்கும் உனக்கும் நல்லது உணர்த்தினான்


எத்தர் தான்  ஜெயிக்க இயலும் எனும்

சட்டத்தை இவன் மாற்றி அமைத்தான்


இப்படித்தான் சமூகம் தன்  குணத்தை

படிப்படியாக மாற்றி அமைக்கும்


ஒவ்வொரு நல்லவன் வெற்றியிலும்

ஒரு கோடி விதிகள் மாற்றப்படும்


இனியிவன் நன்றாக வாழ  வேண்டும்

இன்னும் வேறு சேவை புரிய வேண்டும்


நிபுணன் சேவை  நாட்டுக்குத் தேவை

நிச்சயமாகத் தொண்டுகள்  வேண்டும்


அமைதிப்படைகள் நாட்டுக்குத் தேவை

அவை தான் மெல்ல சரித்திரம் எழுதும்


மாமனிதனுக்கு வீடு மட்டும் ஆகுமோ?

உயர்ந்த சிந்தனைவாதி   சமூகத்திற்கே


வாழிய சச்சின் டெண்டுல்கரே!

வாழிய பல்லாண்டு பல்லாண்டு!