அந்த நாள் ஞாபகம்
அன்னியர் படை எடுத்தது போல்
அம்மணி படம் எடுத்தாடினாள்
இது சரியல்லவென்று ஏளனம்
அது தவறென்ற மெய்ஞ்ஞானம்
வந்து வாய்த்தவன் வெந்து போனவன்
வாழ்க்கையை வீணேயாக்கியவன்
என்ற கோபத்தில் எரிந்த சோகத்தில்
கரிந்த ஆன்மாவைக் கழுவலாயினர்
கொண்டவன் மேல் கொண்ட கோபம்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொண்டதுயிரை
வனிதை விண்ணிற்கும் மண்ணிற்கும்
எரிந்து விழுந்து மக்களைக் கடிந்து
கட்டிலில் விழுந்து கனவோடு போனாள்
ஒன்றல்ல இரண்டல்ல பத்தாண்டு கழித்து.
அன்னியர் படை எடுத்தது போல்
அம்மணி படம் எடுத்தாடினாள்
இது சரியல்லவென்று ஏளனம்
அது தவறென்ற மெய்ஞ்ஞானம்
வந்து வாய்த்தவன் வெந்து போனவன்
வாழ்க்கையை வீணேயாக்கியவன்
என்ற கோபத்தில் எரிந்த சோகத்தில்
கரிந்த ஆன்மாவைக் கழுவலாயினர்
கொண்டவன் மேல் கொண்ட கோபம்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொண்டதுயிரை
வனிதை விண்ணிற்கும் மண்ணிற்கும்
எரிந்து விழுந்து மக்களைக் கடிந்து
கட்டிலில் விழுந்து கனவோடு போனாள்
ஒன்றல்ல இரண்டல்ல பத்தாண்டு கழித்து.
No comments:
Post a Comment