அங்கங்கே தென்படும் முகங்கள்
அத்துமீறி நடமாடும் உடல்கள்
தீவந்து உன்மேல் விழுந்ததோ?
தியை நீ உன்மேல் விட்டாயோ?
தீவினைகள் உன்மேல் பட்டதுவோ?
தீயசொல் உன்மேல் படர்ந்ததுவோ?
கோபத்தின் உச்சிமேல் எண்ணைகண்டு
மண்ணை நாட முயற்சித்தாயோ?
அகர இகரம் உகாரம் போல் குழைந்தாங்கு
தோன்றியது முகம் போன்ற முகம் ஒன்று
சிரிப்பதுவும் அழுவதுவும் ஒன்றே என்ற
சிரிக்காத தத்துவத்தின் முகமானது.
தோலின் மேல் தொலேறி தொங்கியது
வீங்கிய முகமும் கையும் காட்சியானது
கண்காட்சி அல்ல அது கதறும் காட்சி
உணர்வுகளின் சுமை தாங்காமல் வீறிய காட்சி
வார்த்தைத் தீயைத் தப்பிக்க தீயை நாடி
வாடிக்கருகும் மலர்கள் எத்தனையோ?
நாவினால் கக்கப்படும் தீயை விட
காவு வாங்கும் தீயே மேல் என்பர் அவர்.
எண்ணங்களும் வார்த்தைகளும் சமூகம்தான்
எண்ணி எண்ணிக் கருகிட வே ண்டாம் தாயே
தனி மனிதன் தனியாய் எண்ணும் அளவிற்கு
தானாக யோசித்து வெல்லும் அளவிற்கு
வளரவில்லை தாயே உணர வேண்டும் நீயே
சமூகம் தான் இன்று தனி மனிதன்
சமூகத்தின் எண்ண அலைகள் தான் வீட்டில்
சமூகம் என்பது எண்ணக் குவியல்கள்
இன்னும் நாம் விலங்கினம் தான்
இதை நாம் மாற்றிடல் ஆகாது காண்
துரத்தி வரும் நெருப்பு எண்ணங்கள்
இன்னும் விலங்கான சமூகத்தின் வலைகள்
தாயாய், போதையாய்ப் பெண்ணைப் படைத்த
மனித மனம் பெண்ணை உயிராய்க் காண
இன்னும் பல நாள் ஆகும் தாயே
இன்னுடலை அக்கினிக்கு இரையாக்காதே நீயே
உன்னை நோக்கி வரும் தீயைப் பிடித்து
முடிந்தால் அன்றைய உணவை ஆக்குவாயே!
No comments:
Post a Comment