Pages

Saturday, June 14, 2014

பெண்  என்றார்  பேதை என்றார்

பேய் என்றார்  பித்தென்றார்

தாய்  என்றார்  தெய்வம் என்றார்

தொய்வில்லாத  அழகு  என்றார்.

எங்களுக்கு  மன உளைச்சல்

போக்கும்  மருந்தென்றார்.

விளையாட்டு  பொம்மை என்றார்

பிதுக்கும் களி  மண்ணென்றார்

கசக்க  வேண்டிய  பூ என்றார்.  

ஆண்டாண்டு  காலமாய்

ஆண்ட  எண்ணங்கள்.


எங்களை மனிதர்களாய்

மதிக்க வேண்டிய காலம்

மன்னர்களே, வந்தது  இப்போ.

   

No comments:

Post a Comment