உ தவிக்கு வந்தது யார்
உறுதுணையாக நின்றது யார்
வேண்டாமென்ற பிள்ளை
விழாமல் தாங்கிக்கொள்ள
விழிகளுக்குள் ஏக்கம்
தொலைத்த காலத்தை எண்ணி.
அன்பிற்குள் அடங்காத தீயாய்
அழியாத காற்றின் வடிவாய்
பெருகாத அழுகையின் உருவாய்
உருகாத வைரத்தின் முறையாய்
தெரியாத உலகத்தின் நிறமாய்
தேடாத ஆசையின் செயலாய்
ஓடாத நீர்நிலையின் அழிவாய்
உருவாகும் காலத்தின் மாற்றம்.
No comments:
Post a Comment