முட்கள் எல்லாம் பூக்கள்
பூவாய்த்தெரிய வேண்டும்
இந்தக்காலம் வசந்த காலம்
இறந்த காலம் கடந்த காலம்
பார்வையில் கோளாறு
பகல் கனவுக் குழப்பங்கள்
வலியெல்லாம் மனப்பிரம்மை
கேலியெல்லாம் அவர் பிதற்றல்
வலியல்ல வழியதென்று
வருடும் இன்று தென்றலது.
No comments:
Post a Comment